நடிகையுடன் செல்பி எடுக்க முயன்ற போது மேடை சரிந்து விபத்து


நடிகையுடன் செல்பி எடுக்க முயன்ற போது மேடை சரிந்து விபத்து
x
தினத்தந்தி 9 May 2019 11:15 AM IST (Updated: 9 May 2019 11:15 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்கத்தில் மேடையில் நடிகையுடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஏறியதால் மேடை சரிந்து விழுந்தது.

மேற்குவங்காளத்தில் கோபிபல்லாபூர் என்ற இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிர்பாஹா சோரன் என்பவரை ஆதரித்து அம்மாநிலத்தின் பிரபல நடிகையான நுஸ்ரத் ஜஹான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவரைக் காணும் ஆவலில் ஏராளமான ரசிகர்கள் மேடை மீது ஏறினர். தொடர்ந்து நுஸ்ரத்துடன் சேர்ந்து செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அப்போது எதிர்பாராதவிதமாக மேடை திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பரப்புரை மேற்கொண்ட நுஸ்ரத் ஜஹான் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பஷிரத் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story