பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்த ராக்கி சவந்த் : இணையதளத்தில் கடும் விமர்சனம்


பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்த ராக்கி சவந்த் : இணையதளத்தில் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 9 May 2019 5:46 PM IST (Updated: 9 May 2019 5:46 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்து ராக்கி சவந்த் இணையதளத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுத்து இந்தி நடிகை ராக்கி சவந்த் மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பாகிஸ்தான் கொடியை மார்பில் தாங்கிய வண்ணம் உள்ளார். நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன், ஆனால்  Dhara 370 படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதுதான் என பதிவிட்டு இருந்தார். இதனை பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். 

நீங்கள் பாகிஸ்தான் குடியுரிமைக்கு சரியான நபர், ராக்கி சவந்த் என்ற பெயரை பாகிஸ்தானி சவந்த் என்று மாற்றிக்கொள்ளலாம் என பலரும் விமர்சனத்தை முன்வைக்க தொடங்கி விட்டனர். இதற்கிடையே உங்களை அன்-பாலோவ் செய்யப்போகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். Dhara 370 படத்தில் ராக்கி சவந்த் ஒரு பாகிஸ்தானிய பெண்ணாக நடிக்கிறார் என தெரிய வந்துள்ளது. விமர்சனங்களை அடுத்து வீடியோ ஒன்றில் விளக்கம் தெரிவிக்கும் ராக்கி சவந்த், எல்லா பாகிஸ்தானியர்களும் மோசமானவர்கள் கிடையாது. அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன் எனக் கூறியுள்ளார். இதுகூடுதலாக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story