நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !


நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !
x
தினத்தந்தி 10 May 2019 10:49 AM IST (Updated: 10 May 2019 10:49 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் 'அயோக்யா’ திரைப்படம் உருவாகி உள்ளது.  'அயோக்யா’ இன்று  வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.   இந்நிலையில், நேற்று  சென்னையில் `இரும்புத்திரை-2‘ ஷூட்டிங்கில் இருந்த விஷால், படத்தை ரிலீஸ் செய்வதற்காக மேற்கொண்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன.

தயாரிப்பாளர் மது தாக்கூரின் பழைய திரைப்படங்கள் வெளியீட்டில் தரவேண்டிய ரூபாய் 3 கோடியை தந்தால்தான் `அயோக்யா’  திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தரப்பில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால், ``ஒரு நடிகனாக நான் அனைத்து வேலைகளையும் சரியாகத்தான் செய்தேன். எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு எனது `அயோக்யா’ படம் வெளியாகவில்லை. நான் கஜினி முகம்மது போல் எனது நேரம் வரும் வரையில் விடமாட்டேன். எனது பயணம் தொடரும்” என பதிவிட்டிருக்கிறார்.


Next Story