சினிமா செய்திகள்

எதிர்ப்புக்கு பயப்படமாட்டேன் - ஜோதிகா பேட்டி + "||" + Don't be afraid of protest - Jodhika Interview

எதிர்ப்புக்கு பயப்படமாட்டேன் - ஜோதிகா பேட்டி

எதிர்ப்புக்கு பயப்படமாட்டேன் - ஜோதிகா பேட்டி
எதிர்ப்புக்கு பயப்படமாட்டேன் என்று நடிகை ஜோதிகா கூறினார்.

ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராட்சசி படத்துக்கு பிறகு அவர் நடிப்பில் ஜாக்பாட் படம் திரைக்கு வருகிறது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

ஜாக்பாட் படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளேன். இது நகைச்சுவை படம் போல் தெரியும். அதற்கு பின்னால் கதையும் இருக்கும். பெரிய கதாநாயகனுக்கு படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதெல்லாம் இந்த படத்திலும் நிறைய இருக்கிறது. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வருகிறேன்.

நம் கையில் காசு நிறைய வந்தா நிச்சயமா அதை திருப்பி மற்றவங்களுக்கும் கொடுக்கணும். அதுதான் ஜாக்பாட் படத்தின் முக்கியமான கரு. பல இளம் இயக்குனர்கள் எனக்காகவே கதைகளை எழுதுகிறார்கள். அது சந்தோஷமா இருக்கு. ஆனால் ரசிகர்கள் கதாநாயகிகள் படங்களுக்கு பெரிய ‘ஓபனிங்’ கொடுப்பதில்லை. அதுதான் கஷ்டமா இருக்கு. பெரிய ஹீரோக்கள் படம்னா போகிறார்கள். ஹீரோயின் படங்களையும் வரவேற்க வேண்டும். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் பெண்கள் படத்திற்கும் இசையமைக்க வேண்டும். ராட்சசி படத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தது. உண்மையைத் தான் படத்தில் காட்டியுள்ளர்கள் என்று பலர் பாராட்டினார்கள். இந்த மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்லை. பயம் இருந்தால் படமே நடிக்க மாட்டேனே?

ராட்சசி படத்துக்கு பிறகு சிலர் ஈரோட்டில் ஒரு அரசு பள்ளிக்கு பஸ் கொடுத்துள்ளனர். சிலர் பள்ளிக்கு நிதி வழங்கி உள்ளனர். இதுதான் பெரிய பாராட்டு. நான் படம் இயக்க மாட்டேன். என் லட்சியம் என்னவென்றால் கதாநாயகர்கள் படங்கள் அளவுக்கு எனது படம் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும்.” இவ்வாறு ஜோதிகா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தக்கலை அருகே மாயமான பட்டதாரி பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் பெற்றோர் எதிர்ப்பு– பரபரப்பு
தக்கலை அருகே மாயமான பட்டதாரி பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி போராட்டம்
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் விளிம்புநிலை மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சை மேலவீதியில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.
3. ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து அ.தி.மு.க. இரட்டை தலைமைக்கு குன்னம் எம்.எல்.ஏ.வும் எதிர்ப்பு ஓ.பி.எஸ். மீது கடும் தாக்கு
ராஜன் செல்லப்பாவை தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் அ.தி.மு.க. இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4. செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
செங்கிப்பட்டி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மீண்டும் திறக்க எதிர்ப்பு: உருக்கு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கும்மிடிப்பூண்டி அருகே மீண்டும் திறக்க முடிவு செய்ததையடுத்து மூடப்பட்ட இரும்பு உருக்கு தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.