சமுத்திரக்கனி-ஆத்மியாவுடன் விவசாயிகளை பற்றிய வரலாற்று பதிவு ‘வெள்ளை யானை’


சமுத்திரக்கனி-ஆத்மியாவுடன் விவசாயிகளை பற்றிய வரலாற்று பதிவு ‘வெள்ளை யானை’
x
தினத்தந்தி 1 Aug 2019 10:15 PM GMT (Updated: 2 Aug 2019 9:31 AM GMT)

சமுத்திரக்கனியை வைத்து, ‘வெள்ளை யானை’ என்ற படத்தை சுப்பிரமணியம் சிவா டைரக்டு செய்து இருக்கிறார்.

தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர், சுப்பிரமணியம் சிவா. அவருடைய முதல் படமே வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘பொறி,’ ‘யோகி,’ ‘சீடன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தார். வெற்றிமாறன் டைரக்‌ஷனில் வெளிவந்த ‘வட சென்னை,’ ‘அசுரன்’ ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.

தற்போது இவர், நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக் கனியை வைத்து, ‘வெள்ளை யானை’ என்ற படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இதில், சமுத்திரக்கனி ஜோடியாக ஆத்மியா நடித்துள்ளார். இவர், ‘மனம் கொத்தி பறவை’ படத்தில் அறிமுகமானவர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

‘‘வெள்ளை யானை படத்தை முழுமையாக பார்த்து விட்டேன். மிகவும் பிடித்து இருந்தது. இன்றைய விவசாயிகளின் வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான வரலாற்று பதிவு, இது. இந்த படத்துக்கு இசையமைத்ததில், எனக்கு மகிழ்ச்சி’’ என்றார்.

படத்தில் யோகி பாபு, ஈ.ராமதாஸ், டைரக்டர்கள் மூர்த்தி, ஸ்டான்லி, ‘சாலை ஓரம்’ ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இப்போது நடைபெறுகிறது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர முடிவு செய்து இருக்கிறோம்.

Next Story