சினிமா செய்திகள்

வைரலாகும் சர்ச்சை வீடியோ: தீபிகா படுகோனே போதை பொருள் பயன்படுத்தினாரா? + "||" + Deepika Padukone Did you use the drug

வைரலாகும் சர்ச்சை வீடியோ: தீபிகா படுகோனே போதை பொருள் பயன்படுத்தினாரா?

வைரலாகும் சர்ச்சை வீடியோ: தீபிகா படுகோனே போதை பொருள் பயன்படுத்தினாரா?
இந்தி பட உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோகர், மும்பையில் நடிகர்-நடிகைகளுக்கு விருந்து கொடுத்தார்.
இதில் தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஷாகித் கபூர், விக்கி கவுசல், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபல இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

தீபிகா படுகோனே கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்ததால் வரவில்லை. விருந்தில் பங்கேற்றவர்களை வீடியோ எடுத்து கரண் ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். எல்லோரும் குடிபோதையில் இருப்பதுபோல் வீடியோவில் தெரிந்தனர்.


இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி விமர்சனங்களை கிளப்பியது. விருந்தில் தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாகவும் சர்ச்சை கிளம்பின. பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ மஞ்சிந்தர் சிங் சிர்ஸா வீடியோவை பகிர்ந்து “இதை பாருங்கள் இந்தி நடிகர், நடிகைகள் குடிபோதையில் திளைக்கிறார்கள். அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இதற்கு எதிராக எனது குரலை பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிலிந்த் டியோரா, “எனது மனைவியும், நானும் அந்த விருந்தில் கலந்துகொண்டோம். யாரும் போதை பொருள் பயன்படுத்தவில்லை. எனவே பொய்யான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தீபிகா படுகோனே - அலியாபட் மோதல்
மும்பையில் நடந்த திரைப்பட நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே சென்று இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அலியாபட் உள்பட மேலும் சில நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
2. தீபிகா படுகோனேவை உலுக்கிய கதாபாத்திரம்
டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணை குட்டா என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதற்கு லட்சுமி அகர்வால் மறுத்ததால் அவர் முகத்தில் திராவகம் வீசினார்.
3. கிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.