சினிமா செய்திகள்

அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்? + "||" + In the movie Ajith Daughter of Sridevi

அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்?

அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள்?
அஜித்குமார் வக்கீல் வேடத்தில் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.
இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். வினோத் டைரக்டு செய்துள்ளார்.


இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். பிரச்சினையில் சிக்கும் சில பெண்களுக்கு கோர்ட்டில் நீதி கிடைக்க அஜித்குமார் எப்படி உதவுகிறார் என்பது கதை. இந்த படத்துக்கு பிறகு அஜித்குமார் மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார்.

அஜித்குமார்-எச்.வினோத் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. இந்த படம் ஆகஸ்டு மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்கும் என்று போனிகபூர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் படத்தில் மகளை நடிக்க வைக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் கனவாக இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறுகிறது.

ஏற்கனவே ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.