‘காதல்’ என்றதும் கடுப்பான நாயகி!


‘காதல்’ என்றதும் கடுப்பான நாயகி!
x
தினத்தந்தி 4 Aug 2019 12:47 PM IST (Updated: 4 Aug 2019 12:47 PM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர், தமன்னா.

இந்தி படத்திலும் நடிக்கிறார். தனது சினிமா உலக பயணம் பற்றி அவர் பேட்டி அளித்தார். அப்போது, ‘‘உங்களுடன் ஜோடியாக நடித்த ஒரு நாயகனை நீங்கள் காதலித்ததாக வந்த தகவல் உண்மையா?’’ என்று கேட்கப்பட்டது.

உடனே தமன்னா கடுப்பாகி விட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு சிரித்தபடி, பதில் அளித்தார். ‘‘அந்த நடிகர் எனக்கு வெறும் சக நடிகர் மட்டுமே...அவருடன் நான் நட்பு ரீதியாக கூட நெருங்கி பழகியதில்லை. எனக்கு காதல் வந்தால், அதை மறைக்காமல் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன்’’ என்று அவர் கூறினார்!

Next Story