எனக்கு அறுவை சிகிச்சையா? நடிகர் ராணா விளக்கம்


எனக்கு அறுவை சிகிச்சையா? நடிகர் ராணா விளக்கம்
x
தினத்தந்தி 7 Aug 2019 10:00 PM GMT (Updated: 7 Aug 2019 5:56 PM GMT)

நான் நலமாகவே இருக்கிறேன் என்று நடிகர் ராணா விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் நடித்தும் பிரபலமானார். விஜய் சேதுபதி நடிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தை தயாரிக்கிறார்.

திரிஷாவையும், ராணாவையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தனர். இந்த நிலையில் ராணாவுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இதற்காக ஐதராபாத், மும்பை ஆஸ்பத்திரிகளில் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால் அமெரிக்கா சென்றதாகவும், அங்கு ராணாவுக்கு அவரது அம்மா சிறுநீரக தானம் செய்ததாகவும், அதன்படி அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தெலுங்கு பட உலகில் பேசப்பட்டன.

இதற்கு ராணா விளக்கம் அளித்து கூறியதாவது:-

“எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள்  வருகின்றன. இதற்கு பல தடவை விளக்கம் அளித்து சோர்வடைந்து விட்டேன். நான் ஐதராபாத்தில் இருந்து வெளியூருக்கு சென்றாலே எனக்கு ஏதோ பிரச்சினை என்று ரசிகர்கள் பயப்படுகிறார்கள். என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி.

நான் நலமாகவே இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் நடிக்கும் புதிய பட வேலையாகவே அமெரிக்காவுக்கு சென்றேன்.”

இவ்வாறு ராணா கூறினார்.

Next Story