1½ வருடம் சினிமாவுக்கு முழுக்கு; நடிகை சமந்தா கர்ப்பம்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இரண்டு மொழி படங்களிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன.
மெர்சல், தெறி, அஞ்சான், இரும்புத்திரை, யூடர்ன், நடிகையர் திலகம், தங்க மகன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்டவை சமந்தா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.
தெலுங்கில் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஓ பேபி’ படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் நடித்து வருகிறார்.
சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் அவரது மார்க்கெட் குறையவில்லை. இந்தநிலையில் சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்க முடிவு செய்துள்ளார்.
1½ வருடங்கள் புதிய படங்கள் எதிலும் நடிக்க மாட்டேன் என்று தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவர் கூறிவிட்டாராம். கைவசம் உள்ள 96 படத்தை விரைவாக முடித்து விட்டு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.
Related Tags :
Next Story