இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் -நடிகை சுஹாசினி


இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் -நடிகை சுஹாசினி
x
தினத்தந்தி 14 Aug 2019 4:39 PM IST (Updated: 14 Aug 2019 4:39 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளது என்று நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.

சென்னை

சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ண சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளியில் மன அழுத்தம் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான நடிகை சுஹாசினி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இந்தியாவில் எந்த மொழியின் மீதும் வெறுப்பு இருக்கக் கூடாது.  இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளது. அரசு பள்ளிகளின் வாயிலாகத்தான் தமிழ் மொழி நிற்கிறது என கூறினார்.

Next Story