அமெரிக்காவில் வீடு பார்க்கின்றனர் அனுஷ்கா - பிரபாஸ் மீண்டும் காதல்?

அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
த மிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் டார்லிங், மிர்சி, பாகுபலி ஆகிய 3 தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் பேசப்பட்டது. இதனை அவர்கள் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
வெளிநாட்டில் வசிக்கும் தொழில் அதிபர் மகளை பிரபாஸ் மணக்க இருக்கிறார் என்றும் கூறினர். பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் தயாராகி உள்ள சாஹோ படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. அதன்பிறகு பிரபாஸ் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரபாசும், அனுஷ்காவும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதிதாக வீடு வாங்க இருப்பதாகவும், இதற்காக அங்கு வீடு பார்க்கும் வேலையை அவர்கள் தொடங்கி இருப்பதாகவும் இப்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தெலுங்கு பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அனுஷ்கா தற்போது நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மாதவன், அஞ்சலி ஆகியோரும் நடிக்கின்றனர். ஹேமந்த் மதுர்கர் டைரக்டு செய்கிறார்.
Related Tags :
Next Story