இந்தியன்-2 படப்பிடிப்பு ஆந்திர சிறையில், கமல்ஹாசன்


இந்தியன்-2 படப்பிடிப்பு ஆந்திர சிறையில், கமல்ஹாசன்
x
தினத்தந்தி 21 Sept 2019 4:00 AM IST (Updated: 20 Sept 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

‘இந்தியன்-2’ படத்திற்காக விசேஷ அனுமதி பெற்று ராஜமுந்திரி சிறையில் படப்பிடிப்பு நடந்தது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. சென்னையில் முக்கிய காட்சிகளை படமாக்கி விட்டு ஆந்திரா சென்றுள்ளனர். சில காட்சிகளை அங்குள்ள ராஜமுந்திரி சிறையில் படமாக்குகின்றனர். இதற்காக விசேஷ அனுமதி பெற்று கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் சிறைக்கு சென்றனர்.

அங்குள்ள போலீசார் கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளித்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சிறைக்குள் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது. சேனாதிபதியாக நடிக்கும் கமல்ஹாசன் சிறைக்குள் இருப்பது போன்ற காட்சியை எடுக்கின்றனர். இது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் போட்டுத்தள்ளும் கமல்ஹாசன் இறுதியில் போலீசில் சரண் அடைவதுபோன்றும் அவருக்கு கோர்ட்டில் மரண தண்டனை விதிப்பதுபோன்றும் கிளைமாக்ஸ் வைத்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கதை கசிந்துள்ளது. இந்த காட்சியைத்தான் ராஜமுந்திரி சிறையில் படமாக்குகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

கமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வருடம் பிக்பாஸ் 4-வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் விரும்பவில்லை என்றும் அவருக்கு பதிலாக சூர்யா, மாதவன், சிம்பு ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்குவார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை நிகழ்ச்சி குழுவினர் மறுத்துள்ளனர்.
1 More update

Next Story