நடிகர் நம்பியார் வாழ்க்கை படம்


நடிகர் நம்பியார் வாழ்க்கை படம்
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 16 Nov 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

மிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். 60 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தீவிர அய்யப்ப பக்தரான நம்பியார் ஆண்டு தோறும் சபரி மலைக்கு சென்று குருசாமியாகவும் திகழ்ந்தார். 2008-ல் தனது 89-வது வயதில் மரணம் அடைந்தார். நம்பியார் வாழ்க்கை 30 நிமிட ஆவண படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை கவுதம் மேனன் உதவியாளர் சூர்யா இயக்கி உள்ளார்.

நம்பியாரின் வாழ்க்கை, அவர் நடித்த திரைப்படங்கள், ஆன்மிக ஈடுபாடு ஆகிய விஷயங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தை வெளியிடும் நிகழ்ச்சியும் நம்பியாரின் நூற்றாண்டு விழாவும் வருகிற 19-ந்தேதி சென்னை மியூசிக் அகடமியில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சிவகுமார் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நம்பியார் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

Next Story