இணையதளத்தில் வெளியான விஷாலின் ‘ஆக்‌ஷன்’


இணையதளத்தில் வெளியான விஷாலின் ‘ஆக்‌ஷன்’
x
தினத்தந்தி 18 Nov 2019 12:30 AM GMT (Updated: 18 Nov 2019 12:30 AM GMT)

ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் திரைக்கு வந்த உடனேயே திருட்டு வி.சி.டி. மற்றும் இணைய தளங்களில் வெளியாகின்றன.

ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் திரைக்கு வந்த உடனேயே திருட்டு வி.சி.டி. மற்றும் இணைய தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதை தடுக்க தயாரிப்பாளர்கள் போராடி வருகிறார்கள்.

தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடைவிதித்தும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதையும் மீறி புதிய படங்கள் திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே இணையதளத்தில் வெளியாகி வசூலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகி தீபாவளிக்கு திரைக்கு வந்த விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களும் தப்பவில்லை.

இரண்டு படங்களும் திரைக்கு வந்த அன்றைய தினமே இணைய தளத்தில் வெளியானது. இவற்றை ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். தற்போது திரைக்கு வந்துள்ள விஷாலின் ஆக்‌ஷன் படமும் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளனர். பெரும்பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு இருந்தன. புதிதாக திரைக்கு வரும் படங்களை இணையதளத்தில் வெளியிட கோர்ட்டுக்கு சென்று தடை வாங்குகிறார்கள். அதையும் மீறி வந்து விடுகின்றன.

Next Story