படப்பிடிப்பில் விபத்து நடிகை பரினீதி சோப்ரா காயம்
நடிகை பரினீதி சோப்ரா படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை இந்தியில் படமாகிறது. அமேல் குப்தா இயக்குகிறார். பிரபாசுடன் சாஹோ படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரத்தா கபூரை, சாய்னா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தனர். இதற்காக விசேஷ பேட்மிண்டன் பயிற்சிகள் எடுத்தார்.
படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கால்ஷீட் பிரச்சினையால் படத்தில் இருந்து ஸ்ரத்தா கபூர் விலகினார். அவருக்கு பதில் சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் நடிக்க பரினீதி சோப்ராவை தேர்வு செய்தனர். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பரினீதி சோப்ரா கழுத்தில் காயம் அடைந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனக்கு படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக கழுத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக பிசியோதெரபி சிகிச்சை எடுத்தேன். இப்போது தேறி வருகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். கழுத்தில் காயம்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி பரினீதி சோப்ராவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story