மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
மூத்த மலையாள நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
மலையாள சினிமா உலகில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிப்பில் புகழ் பெற்றவர் ஸ்ரீனிவாசன். தேசிய விருது, மாநில விருதுகள் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது மகன் வினீத் ஸ்ரீனிவாசன், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.
ஸ்ரீனிவாசனுக்கு கடந்த ஜனவரி மாதமே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்னைக்கு செல்ல கொச்சின் விமான நிலையம் வந்துள்ளார். அப்போது மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்ரீனிவாசனின் உடல் நிலை சற்று தேறிய பிறகு, ஆஸ்டெர் மெட்சிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை நடைபெறும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story