சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் இருந்துவிஜய் படங்கள் மீண்டும் கசிந்தன + "||" + Vijay pictures leaked again

படப்பிடிப்பில் இருந்துவிஜய் படங்கள் மீண்டும் கசிந்தன

படப்பிடிப்பில் இருந்துவிஜய் படங்கள் மீண்டும் கசிந்தன
விஜய் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் மீண்டும் வெளியாகி உள்ளது.
தீபாவளிக்கு திரைக்கு வந்த பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் உள்ளனர்.

இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்பட்டது. நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து தயராகிறது என்றும், கமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறது என்றும் தகவல்கள் பரவின. இதனை படக்குழுவினர் மறுத்தனர். வேறுமாதிரியான புதிய கதையில் இந்த படத்தை எடுப்பதாகவும் கூறினர்.

விஜய் தோற்றமும் படப்பிடிப்பு படங்களும் வெளியாகி விடாமல் படக்குழுவினர் கவனமாக இருந்தனர். ஆனாலும் படங்கள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் தோற்றம் வெளிவந்தது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாவலர்களை நிறுத்தி செல்போன்கள் கொண்டு செல்வதை தடுத்தனர். அதையும் மீறி தற்போது மீண்டும் விஜய் நடித்த காட்சிகள் அவரது தோற்றங்கள் என்று 3 புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்களில் விஜய் கருப்பு கண்ணாடி அணிந்து இளமை தோற்றத்தில் இருக்கிறார். கழுத்தில் அடையாள அட்டையையும் தொங்க விட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...