உண்மை சம்பவங்களுடன் `தண்டுபாளையம்'


உண்மை சம்பவங்களுடன் `தண்டுபாளையம்
x
தினத்தந்தி 22 Nov 2019 9:34 AM GMT (Updated: 2019-11-22T15:04:21+05:30)

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, `தண்டுபாளையம்' என்ற படம் தயாராகி இருக்கிறது. இது ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் ஆகிய 2 மொழிகளில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது.

 தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி, மராட்டி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் கே.டி.நாயக் கூறியதாவது:-

``இது, முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். 1990-களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தண்டுபாளையம் என்ற ஊரில் இருந்து ஒரு கொள்ளை கும்பல் உருவாகிறது. நாளடைவில், ஆசியாவிலேயே அதிக திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்திய கொடூர கும்பலாக மாறுகிறது.

அந்த கும்பலுக்கு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை திரட்டி, இந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். சுமன் ரங்கநாத், வீணா, ரிச்சா சாஸ்திரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.''


Next Story