அருண் விஜய்-விஜய் ஆண்டனி-அக்ஷராஹாசனுடன் உலக தரத்தில் திகில் அனுபவம்: `அக்னி சிறகுகள்'
டி.சிவா தயாரிக்கும் `அக்னி சிறகுகள்' படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷராஹாசன் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றது.
ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் கொல்கத்தாவில் பட மானது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க், கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும் நடை பெற்றுள்ளது. இப்போது, படப் பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்து இருக்கிறது.
கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம் இது என்ற பெருமையை இந்த படம் பெறுகிறது. நவீன் டைரக்டு செய்து வருகிறார். இவருடைய கதை சொல்லும் முறையையும், படமாக்கும் விதத்தையும் தயாரிப்பாளர் டி.சிவா பாராட்டினார். ``தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் இதுவரை பார்த்திராத பிரமாண்டமான திகில் அனுபவத்தை உலக தரத்தில் தரும் படைப்பாக இருக்கும்'' என்றும் அவர் கூறினார்.
வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில் ரெய்மா சென், பிரகாஷ்ராஜ், ஜே.எஸ்.கே. ஆகியோருடன் சில முக்கிய நட்சத்திரங்களும் பங்கு பெறுகிறார்கள். விஜய் ஆண்டனி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார்.''
Related Tags :
Next Story