சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... 47 வயதில் வாய்ப்பு தேடும் நடிகை
சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... என 47 வயதில் நடிகை மந்த்ரா பேடி வாய்ப்பு தேடி வருகிறார்.
சென்னை,
சிம்புவுடன் 'மன்மதன்' படத்தில் நடித்தவர் மந்த்ரா பேடி. அடுத்து 'அடங்காதே' படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் பிரபாஸுடன் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார்.
நடிகை மந்த்ரா பேடிக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. தற்போது 47 வயதை கடந்து கொண்டிருக்கிறார்.
கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தபோது கவர்ச்சியான உடைகள் அணிந்து வந்து கலக்கினார். இது அவருக்கு திரையுலகில் பெரிய அளவில் கைகொடுத்ததுடன் பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. தற்போது, 47 வயதிலும் மந்த்ரா பேடி தனது உடற்கட்டை கச்சிதமாக பராமரித்து வருகிறார்.
தனது இணையதள பக்கத்தில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியான படங்களை விதவிதமான போஸ்களில் வெளியிட்டு வருகிறார்.
நடிகை மல்லிகா அரோராவும், மந்த்ரா பேடியின் வயதை நெருங்கியவர். அவரும் தனது உடற்கட்டை பிட்டாக வைத்திருப்பதுடன் கிக்கான படங்கள் வெளியிடுகிறார். அதேசமயம் படங்களில் வரும் வாய்ப்பை ஏற்று கவர்ச்சி காட்டி நடிக்கிறார்.
கவர்ச்சி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டு தற்போது அப்படியொரு வாய்ப்புக்காக காத்திருப்பதுபோல் இணைய தளத்தில் டூபீஸ் படங்களை வெளியிட்டு வருகிறார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும் மந்த்ரா பேடியை கவர்ச்சியாக நடிக்க வைக்க இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
மந்த்ரா பேடியின் இளமை துடிப்புக்கு என்ன காரணம் என்றால் அவர் தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வதுடன் ஒருவகை திரவ உணவை எடுத்துக்கொள்கிறார். அதுதான் அவரது உடற்கட்டை இளமை பொலிவுடன் வைத்திருக்கிறது என்கிறார்.
Related Tags :
Next Story