சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை
சகோதரி ஷாகீன் பட்டின் புத்தகம் குறித்து பேசும்போது பிரபல நடிகை ஆலியா பட் கண்ணீர் விட்டார்.
மும்பை,
பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட். இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ஆலியா பட்டின் சகோதரி ஷாகீன் பட், "நான் எப்போதும் (ஐ.நா) மகிழ்ச்சியாக இருந்ததில்லை " என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
இதில் மகேஷ் பட், அவரது மனைவி சோனி ராஜ்தான், மகள்களான நடிகைகள் பூஜா பட், ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். விழாவில் பேசிய புத்தகத்தை எழுதியவரான ஷாகீன் பட், மன அழுத்தம் தமக்கு 12 வயது முதல் 20 ஆண்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டார். மன அழுத்தத்தைப் புரிந்துக் கொண்டு அதனை தவிர்க்க தமது புத்தகம் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து, சகோதரி ஷாகீன் பட்டின் புத்தகம் குறித்து பேசும்போது பிரபல நடிகை ஆலியா பட் கண்ணீர் விட்டார். பின்னர் அவர், தமது சகோதரியின் புத்தகம் தம்மை நெகிழ்ச்சியடைய வைத்ததாக கூறினார்.
தினசரி வாழ்வில் மனதுக்குள் உருவாகும் இனம் புரியாத சோகம், வேலையில் ஆர்வமின்மை, சோர்வு , சலிப்பு போன்றவற்றால் பல்வேறு நரம்பியல், மூளை, நீரிழிவு தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக ஆலியா பட் தெரிவித்தார்.
Related Tags :
Next Story