ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா - குஷ்பு


ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா - குஷ்பு
x
தினத்தந்தி 10 Dec 2019 6:00 PM IST (Updated: 10 Dec 2019 6:00 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா-குஷ்பு

சென்னை 

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன்,  நடிகை மீனா இணைந்து நடிக்க உள்ளார். பொங்கலுக்கு திரைக்கு வரும் தர்பார் படத்தை தொடர்ந்து, சிவா இயக்கத்தில் தலைவர் 168 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில், ரஜினி நடிக்கிறார். 

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர்  நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினியின் புதிய படத்தில், மீனாவும் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  ஏற்கனவே, எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்துள்ள மீனா, மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு, நன்றி தெரிவித்துள்ளார்.  அது போல்  நடிகை குஷ்பு நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டு உள்ளது.

Next Story