பாடங்கள் கற்றுத்தரும் தோல்விகள் -ரகுல்பிரீத் சிங்


பாடங்கள் கற்றுத்தரும் தோல்விகள் -ரகுல்பிரீத் சிங்
x
தினத்தந்தி 13 Dec 2019 4:00 AM IST (Updated: 13 Dec 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

தோல்விகள் தனக்கு பாடங்கள் கற்றுத்தருவதாக நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

“வாழ்க்கையில் தோல்விகள் வந்தால் துவள கூடாது. தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் முதல் படி என்பதை புரிந்து கொண்டால் இன்னும் பல வெற்றிகள் நம்மிடம் கைகுலுக்க வரும். நான் செய்ய வேண்டும் என்று நினைத்த வேலையை தன்னம்பிக்கையோடு ஆரம்பிப்பேன். என் மீது எனக்கு நம்பிக்கை அதிகம்.

எல்லோருக்கும் இருக்க வேண்டிய அளவு தன்னம்பிக்கைதான் எனக்கும் இருக்கிறது. அந்த தன்னம்பிக்கையோடுதான் எனக்கு கொடுத்த வேலையை நான் ஆரம்பிக்கிறேன். ஆனால் அளவு கடந்த தன்னம்பிக்கை நல்லது இல்லை. நமக்கு என்ன சக்தி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். சில நேரங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தோல்விகள் வந்து கவலையை கொடுக்கும்.

அதை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதனால் தோல்வி வந்தது. நாம் அதில் என்ன தவறு செய்தோம் என்று யோசித்தால் அதன்பிறகு வரும் வாய்ப்புகளை நன்றாக உபயோகித்துக்கொள்ளலாம். நமக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை தெரிவிப்பது தோல்விகள்தான்.

அந்த தோல்விகளில் இருந்து வெளியே வர நமது முழு பலத்தையும் அப்போதுதான் உபயோகப்படுத்திக்கொள்ள முடியும். வாழ்க்கையில் பாடங்கள் கற்றுக்கொள்ள தோல்விகள்தான் சரியான வழி.”

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

Next Story