பட விழாவில் அழுத தீபிகா படுகோனே


பட விழாவில் அழுத தீபிகா படுகோனே
x
தினத்தந்தி 12 Dec 2019 11:15 PM GMT (Updated: 2019-12-13T00:58:29+05:30)

‘சப்பாக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை தீபிகா படுகோனே மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதார்.

டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வாலை, குட்டா என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதும் அதற்கு மறுத்த லட்சுமி அகர்வால் முகத்தில் குட்டா திராவகம் வீசியதும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்குக்கு பிறகுதான் சுப்ரீம் கோர்ட்டு கடைகளில் திராவகம் விற்பதை தடை செய்தது.

லட்சுமி அகர்வால் வாழ்க்கை ‘சப்பாக்’ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. மேக்னா குல்சார் இயக்கி உள்ளார். இதில் லட்சுமி அகர்வால் வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். திராவகம் வீச்சில் முகமே மாறியதுபோன்ற தீபிகா படுகோனே தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

“சப்பாக் கதையும் கதாபாத்திரமும் என்னை உலுக்கியது. மேக்கப் போட மூன்று மணிநேரம் ஆனது என்று அவர் கூறினார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. பின்னர் மேடையில் பேசிய தீபிகா படுகோனே, “இந்த டிரெய்லரை பார்த்த பிறகு என்னால் பேச முடியவில்லை. படம் பற்றி பிறகு பேசலாம் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியபடி மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதார்.

படத்தின் இயக்குனர் மேக்னா கூறும்போது இப்போதுதான் முழு டிரெய்லரையும் தீபிகா பார்த்துள்ளார். அதனால் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார் என்றார். தீபிகா அழுத வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story