திகில் கலந்த நகைச்சுவை படம்; `நான் சிரித்தால்...'
டைரக்டர் சுந்தர் சி. படங்களை இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு அவர் சொந்தமாக படங்களை தயாரித்தும் வருகிறார்.
டைரக்டர் சுந்தர் சி. தயாரிக்கும் புதிய படத்துக்கு, `நான் சிரித்தால்...' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் ராணா டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார். அவர் கூறுகிறார்:-
``படத்தின் பெயரை போலவே இது ஒரு நகைச்சுவை படம். நகைச்சுவை, திணிக்கப்பட்டது போல் இருக்காது. கதையுடன் ஒன்றியதாக இருக்கும். நகைச்சுவையுடன் ஒரு நல்ல கருத்தையும் கூறியிருக்கிறோம். படத்தின் சிறப்பு அம்சம், கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி சிரிக்கின்ற காட்சிகள்தான். அவர் சிரிக்கும்போது பார்வையாளர்களுக்கு சிரிப்பும், பயமும், பரிதாபமும் ஏற்படும்.
படத்தின் வில்லனாக டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் நடித்து இருக்கிறார். அவருடன் பாண்டியராஜன், ஐஸ்வர்யா மேனன், முனீஸ்காந்த், ரவிமரியா ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய காட்சி (கூடைப்பந்து போட்டி) சென்னையில் உள்ள ஒரு உள் விளையாட்டு அரங்கில் படமாக்கப்பட்டது.
கதாநாயகனும், வில்லனும் சந்தித்துக் கொள்கிற காட்சிகளில், நகைச்சுவை கலந்த திகில் இருக்கும். படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது.''
Related Tags :
Next Story