விஷ்ணு விஷாலுக்கு 2-வது திருமணம்?
விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவை 2-வது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ல் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் பெரிய வெற்றி பெற்றது. விருதுகளையும் குவித்தது.
2011-ல் தனது கல்லூரி தோழியை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவே விவாகரத்துக்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்லும் புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில் இருவரும் கட்டிப்பிடித்தும், முத்தமிட்டும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் தங்கள் காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜுவாலா கட்டாவை 2-வது திருமணம் செய்து கொள்ள விஷ்ணு விஷால் திட்டமிட்டு இருப்பதாகவும் இதுபற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் பேசப்படுகிறது. விஷ்ணு விஷால் தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எப்.ஐ.ஆர் படத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Related Tags :
Next Story