கொஞ்சமாக ஆசைப்படுங்கள்... கொஞ்சமாக வருத்தப்படுங்கள்... நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
கொஞ்சமாக ஆசைப்படுங்கள்... கொஞ்சமாக வருத்தப்படுங்கள்... என சுறுசுறுப்பாக இருக்க நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறி உள்ளார்.
ஐதராபாத்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். ரஜினியின் 167-வது படமான தர்பாரில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் வரும் 9-ம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள தர்பாருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது தர்பார் பட புரமோஷனில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பட ரிலீசுக்கு முன்பான நிகழ்ச்சி ஒன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் ஏஆர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த், நடிகை நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ரஜினி சந்தோஷமாக வாழ்வது எப்படி என தெரிவித்தார். மேடையில் பேசிய அவர் கூறியதாவது:-
எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறேன் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக பேசுங்கள் இதை எல்லாம் செய்தால் சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார்.
பாகுபலி திரைப்படத்தை போல பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது என பாராட்டினார்.
Related Tags :
Next Story