ரசிகர்களை கவர்ந்த சூர்யா பட டிரெய்லர்


ரசிகர்களை கவர்ந்த சூர்யா பட டிரெய்லர்
x
தினத்தந்தி 9 Jan 2020 5:30 AM IST (Updated: 9 Jan 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

சூர்யா, சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 38-வது படம். கதாநாயகியாக அபர்ணா முரளி வருகிறார். இறுதி சுற்று படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் சூர்யா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சாதாரண இளைஞன் விமான நிறுவனம் தொடங்க ஆசைப்படுவதையும், அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகளையும் கருவாக வைத்து படத்தை எடுத்துள்ளனர்.

“கையில் ஆறாயிரம் ரூபாயை வைத்து கொண்டு விமான கம்பெனியை ஆரம்பிக்க போவதாக சொன்னபோது எவன்டா இந்த லூசு என்று பார்த்தது” என சூர்யா பஞ்ச் வசனம் பேசுவது போன்று டிரெய்லர் தொடங்குகிறது. விமான நிறுவனம் தொடங்க ஆசைப்படும் சூர்யாவும் அதற்காக அவர் படும் கஷ்டங்களும் டிரெய்லரில் இடம்பெற்று உள்ளன.

“உனக்கெல்லாம் எதுக்கய்யா பெரிய மனுஷங்க செய்ற தொழில்” என்று ஒருவர் கேட்க நிமிருடா நிமிருடா என்ற பாடல் ஒலிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு அவரது ரசிகர்களுக்கு தீனிபோடும் வகையில் இருக்கும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். டிரெய்லரை நடிகர்கள் மோகன்லால், ராணா ஆகியோர் வெளியிட்டனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Next Story