சினிமா செய்திகள்

தீபிகா படுகோனேவின் மத்திய அரசு விளம்பர படம் நிறுத்தம்? + "||" + Deepika Padukone's Central Government Promotional Film Stop?

தீபிகா படுகோனேவின் மத்திய அரசு விளம்பர படம் நிறுத்தம்?

தீபிகா படுகோனேவின் மத்திய அரசு விளம்பர படம் நிறுத்தம்?
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நடிகை தீபிகா படுகோனே எதிர்ப்பு தெரிவித்ததுடன் பல்கலைக்கழகத்துக்கே நேரில் சென்று மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார்.
தீபிகா படுகோனேவின் துணிச்சலை பாராட்டினர். அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியது. தனது சப்பாக் படத்தை விளம்பரப்படுத்த இப்படி செய்கிறார் என்று விமர்சித்தனர். அந்த படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர். 

சப்பாக் படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து அதை ரத்து செய்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தீபிகா படுகோனே, “நான் நடித்த பத்மாவத் படம் வந்தபோதும் இப்படித்தான் எதிர்த்தார்கள். இதற்காக எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன். இந்தியாவின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது” என்றார்.

மத்திய அரசின் ‘ஸ்கில் இந்தியா’ திட்ட விளம்பர படத்தில் தீபிகா படுகோனே நடித்து இருந்தார். அனைவருக்கும் சம வாய்ப்புகள் அளிப்பது குறித்த விழிப்புணர்வு படமாக இதை எடுத்து இருந்தனர். இந்த விளம்பர படத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த விளம்பரத்தை முறையாக எடுக்கவில்லை என்றும், விளம்பர வீடியோவை மதிப்பீடு செய்து வருவதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.