நகைச்சுவை படத்துக்கு ‘ஒபாமா’ என்று பெயர் சூட்டியது ஏன்?


நகைச்சுவை படத்துக்கு   ‘ஒபாமா’ என்று பெயர் சூட்டியது ஏன்?
x
தினத்தந்தி 3 March 2020 11:41 AM GMT (Updated: 3 March 2020 11:41 AM GMT)

நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு, ‘ஒபாமா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘ஒபாமா’ என்று  படத்துக்கு பெயர் சூட்டியது ஏன்? என்பது பற்றி டைரக்டர் ஞானி பாலா கூறியதாவது:-

“ஒபாமா என்றால் அமெரிக்க முன்னாள் அதிபர் என்று பலரும் நினைக்கலாம். ‘ஒ’ என்பது கதாநாயகனின் ‘இனிஷியல்.’ ‘பாமா’ என்பது கதாநாயகியின் பெயர். இதுதான், ‘ஒபாமா.’ இன்றைய அரசியல் நிலவரத்தை நகைச்சுவையாக சொல்லும் படம், இது. நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவையில் ஜனகராஜ் கலக்கி இருக்கிறார்.

கதாநாயகனாக பிரித்திப், நாயகியாக பூர்னிஷா நடித்துள்ளனர். நட்புக்காக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். ஜெயசீலன் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

Next Story