பிரபுதேவா படத்துக்கு சிக்கல்


பிரபுதேவா படத்துக்கு சிக்கல்
x
தினத்தந்தி 6 March 2020 5:00 AM IST (Updated: 6 March 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

பிரபுதேவா நடித்துள்ள ‘பொன்மாணிக்கவேல்’ படம் இன்று (வெள்ளிக் கிழமை) திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன.

 ‘பொன்மாணிக்கவேல்’ படம் கடைசி நேரத்தில் பண விவகாரத்தால் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில இடங்களில் வியாபாரம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பொன்மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டைரக்டர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். முகில் செல்லப்பன் இயக்கி உள்ளார். அதிரடி படமாக தயாராகி உள்ளது.

பிரபுதேவா நடிப்பில் கடந்த வருடம் சார்லி சாப்ளின்-2, தேவி-2 படங்கள் வந்தன. தற்போது தேள், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிய தபாங்-3 படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. மீண்டும் சல்மான்கான் நடிக்கும் ராதே படத்தை இயக்கி வருகிறார்.

எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், ஈவர் கரவாது, இந்த நிலை மாறும், முரட்டு சிங்கம் ஆகிய படங்கள் இன்று வெளியாகின்றன.


Next Story