துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய்?


துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய்?
x
தினத்தந்தி 6 March 2020 5:45 AM IST (Updated: 6 March 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. மாஸ்டர் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் புதிய படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டைரக்டர் ஷங்கர், பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, அருண் ராஜா காமராஜா, சுதா கொங்கரா ஆகியோர் கதை சொல்லி உள்ளனர்.

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்படுகிறது. நடிகர் பார்த்திபனும் விஜய் படத்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் தயாராகி வருவதாக தற்போது புதிய தகவல் பரவி வருகிறது.

விஜய் வெற்றி படங்கள் பட்டியலில் துப்பாக்கி முக்கிய படம். 2012-ல் இந்த படம் வந்தது. காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜமால் ஆகியோர் நடித்து இருந்தனர். விஜய் ராணுவ உளவு அதிகாரியாக வந்தார். படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுக்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். ஏ.ஆர்.முருகதாசிடமும் வற்புறுத்தினர்.

இதையடுத்து துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான திரைக்கதையை ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்து விட்டதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Next Story