49-வது பிறந்த நாள்: அஜித்தை வாழ்த்திய நடிகர்-நடிகைகள்
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று 49-வது பிறந்தநாள்.
சென்னை,
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று 49-வது பிறந்தநாள். கொரோனா பாதிப்பினால் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவர் நடிக்கும் ‘வலிமை’ படம் சம்பந்தமான தகவல்களை வெளியிடுவதையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆனாலும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். இதுபோல் நடிகர்-நடிகைகளும் வலைத்தளத்தில் வாழ்த்தினர்.
நடிகர் தனுஷ், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் சார்” என்று கூறியுள்ளார். நடிகர் பார்த்திபன், “இல்லத்தை பூமியிலும், உள்ளத்தை வானத்திலும் வைத்து வாழும் அபூர்வ நடிகர். மாற்று இல்லாத அல்டிமேட் ஸ்டார். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். மே மாத கடவுளே தல தானே ரசிகர்களுக்கு” என்று கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “எனது ஜார்ஜ் க்ளூனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றைக்கும் என்றைக்கும் உங்களுக்கு மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், “நமது அன்பான தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். நடிகர்கள் சிபிராஜ், அருண் விஜய், நடிகைகள் ராதிகா, ஹன்சிகா, இயக்குனர்கள் சேரன், வெங்கட் பிரபு, பாண்டிராஜ் உள்ளிட்ட மேலும் பலர் வாழ்த்தினர்.
Related Tags :
Next Story