திகில் வெப் தொடரில் பிரியாமணி
திகில் வெப் தொடரில் நடிகை பிரியாமணி நடிக்கிறார்.
சென்னை,
‘தி பேமிலிமேன்’ என்ற வெப் தொடரில் நடித்து, டிஜிட்டல் தள ரசிகர்களிடம் இருந்து அதிக பாராட்டை பெற்ற பிரியாமணி, தற்போது ‘அதீத்’ என்ற இன்னொரு வெப் தொடரிலும் நடிக்கிறார். இதில் ராணுவ அதிகாரியின் மனைவியாக வருகிறார். இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:-
போரில் ஒரு ராணுவ அதிகாரி இறந்து போனதாக அறிவிக்கின்றனர். ஆனால் 10 வருடங்கள் கழித்து அந்த அதிகாரி மனைவி, மகளுடன் சேர்ந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க உயிரோடு வருகிறார். அப்போது அந்த தாய், மகளின் நிலைமை என்ன? அந்த ராணுவ அதிகாரி இறந்து போனதாக அறிவிப்பு வந்ததின் பின்னணி என்ன? என்பதை மையமாக வைத்து திகில் தொடராக உருவாகிறது.
இந்தியில் அஜய் தேவ்கான் ஜோடியாக ‘மைதான்’ படத்திலும் நடித்து வருகிறேன். அஜய் தேவ்கானுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
2013-ல் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு நடனம் மட்டும் ஆடினேன். தெலுங்கில் வெங்கடேஷ், ராணா ஆகியோர் படங்களிலும் நடித்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.
Related Tags :
Next Story