வாஸ்கோடகாமா இப்போது இந்தியா வந்தால் அவர்கிட்ட என்ன சொல்வாங்க? - நடிகை ஆர்த்தி வெளியிட்ட டுவீட்
நடிகை ஆர்த்தி டுவிட்டரில் வெளியிட்ட ஜோக்கை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு அதிகமான கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை,
நடிகை ஆர்த்தி பிரபல நகைச்சுவை நடிகை ஆவார். பல நடிகைகளுடனும் தோழியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் நடிகை ஆர்த்தி. தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் உள்ள ஆர்த்தி தனது கணவருடன் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன், நடிகை ஆர்த்தி வெளியிட்ட வீடியோவில், ‘கடினமான கொரோனா காலத்தை கடந்து வந்து கொண்டு இருக்கிறோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சினிமாவே வாழ்வாதாரம். நடிகர்கள் பலர் சம்பளத்தை 25 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை குறைத்துள்ளனர்.
அடுத்த ஒரு வருடத்துக்கு நான் நடிக்கப்போகும் ஒவ்வொரு படத்தில் இருந்தும் என் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் நமது முதலாளிகள். அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்’ என்று பேசி இருந்தார். இதனால் பலரின் பாராட்டுக்களை பெற்றார்.
இந்தநிலையில் இன்று ஒரு கடி ஜோக்கை ஷேர் செய்திருக்கிறார் நடிகை ஆர்த்தி. அதாவது, "மாஸ்கோட வாமா!" இப்படி ஒரு ஜோக்கை ஷேர் ஆர்த்தி செய்துள்ளார். ஆர்த்தியின் இந்த டுவிட்டை பார்த்த சமூகதளவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#coronavirus#COVIDー19pic.twitter.com/C9NKMsEgqQ
— Actress Harathi (@harathi_hahaha) May 12, 2020
Related Tags :
Next Story