சினிமா செய்திகள்

ராகவேந்திரா கோவில்: ரஜினி தான் காரணம் - ராகவா லாரன்ஸ் + "||" + Raghavendra Temple: Rajini's Reason - Raghava Lawrence

ராகவேந்திரா கோவில்: ரஜினி தான் காரணம் - ராகவா லாரன்ஸ்

ராகவேந்திரா கோவில்: ரஜினி தான் காரணம் - ராகவா லாரன்ஸ்
ராகவேந்திரா கோவில் உருவாக்கத்துக்கு ரஜினி தான் காரணம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

நடிகர் ராகவா லாரன்ஸ் ராகவேந்திரா சுவாமியின் தீவிர பக்தர். தற்போது தமிழில் வெற்றிபெற்ற காஞ்சனா (முனி 2) படத்தினை  இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இதில் அக்‌ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். மேலும் கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சந்திரமுகி 2 பாகத்தில் நடிக்க உள்ளார். 

இந்நிலையில் ராகவேந்திரா சுவாமிக்கு கோவில் கட்ட வேண்டும் என்பதே தமது மிகப் பெரிய ஆசை என்றும், இதற்கு காரணமான நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி சொல்வதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “ ராகவேந்திர சுவாமிகளுக்காக ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசை. இப்போது எனது ராகவேந்திர சுவாமி சிலையை சமூக ஊடகங்களில் பார்க்கும்போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த சிலை உருவானதற்கு காரணமான தலைவர் சூப்பர்ஸ்டாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.