சினிமா செய்திகள்

மும்பையில் தவித்த 90 தமிழர்களை மதுரைக்கு அனுப்பிய டைரக்டர்! + "||" + Director who sent 90 Tamils to Madurai in Mumbai!

மும்பையில் தவித்த 90 தமிழர்களை மதுரைக்கு அனுப்பிய டைரக்டர்!

மும்பையில் தவித்த 90 தமிழர்களை மதுரைக்கு அனுப்பிய டைரக்டர்!
மும்பையில் தவித்த 90 தமிழர்களை டைரக்டர் சுசி கணேசன் மதுரைக்கு அனுப்பினார்.

பிரசாந்த்-சினேகா நடித்த ‘விரும்புகிறேன்’ படத்தை இயக்கி, டைரக்டராக அறிமுகமானவர், சுசி கணேசன். பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே-2 ஆகிய படங்களையும் இவர் டைரக்டு செய்து இருக்கிறார். தற்போது மும்பையில் தங்கியிருந்து சில இந்தி படங்களை இயக்கி வருகிறார்.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்த வேளையில், மதுரை மற்றும் விருதுநகரை சேர்ந்த 90 தமிழர்கள் ஊர் திரும்ப முடியாமல் மும்பையில் தவித்துக்கொண்டிருந்தார்கள். இதுபற்றி அறிந்த டைரக்டர் சுசி கணேசன் தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் உதவியுடன், அந்த 90 தமிழர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்து இருக்கிறார்.

‘ஐ.ஏ.எஸ்.’ என்பது கவர்ச்சியான பதவி அல்ல...களம் இறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த சம்பவம், இது. அன்பழகனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார், சுசி கணேசன்!

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனா பாதிப்பில் இருந்து 91 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்
மும்பையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 91 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.
2. தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்... ஐந்து நாட்கள்.. ஐந்து கதைகள்...
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்... ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இதற்கு ஐந்து கதைகள் கூறப்படுகிறது
3. மும்பையில் இன்று மேலும் 858 பேருக்கு கொரோனா தொற்று
மும்பையில் இன்று மேலும் 858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கொரோனா
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மும்பையில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மும்பையில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.