ரஜினிகாந்துக்காக கதை தயார்!


ரஜினிகாந்துக்காக கதை தயார்!
x
தினத்தந்தி 14 Jun 2020 6:27 AM IST (Updated: 14 Jun 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

‘கிருஷ்ண லீலை,’ ‘சூரி’ ஆகிய படங்களை இயக்கியவர், ஸெல்வன். டைரக்டர் ஷ்ங்கரிடம் உதவி டைரக்டராக இருந்தவர். இவர், ரஜினிகாந்துக்காக ஒரு கதை தயார் செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகிறார்.

‘’கடந்த 2018 டிசம்பர் 5-ந் தேதி என் மனைவி சரளா, காலமானார். அவர் ஆசையாய் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். மனைவியை இழந்த நான், கொரோனாவிடம் இருந்து தப்புவதற்காகவும், எங்கள் மகனை பற்றிய மனைவியின் ஆசையை நிறைவேற்றவும், அவளுடைய சொந்த ஊருக்கு (விருத்தாசலம் அருகில் உள்ள கோபூவனூர்) மகனை அழைத்து வந்து விட்டேன்.

இந்த 70 நாட்களில், ரஜினிகாந்துக்காக ஒரு கதை தயார் செய்து இருக்கிறேன். அவரை சந்தித்து கதை சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.”

Next Story