சினிமா செய்திகள்

சினிமாவில் 19 ஆண்டுகள் நீடிப்பது மகிழ்ச்சி - நடிகை ஸ்ரேயா + "||" + At the cinema Pleased to extend to 19 years Actress Shreya

சினிமாவில் 19 ஆண்டுகள் நீடிப்பது மகிழ்ச்சி - நடிகை ஸ்ரேயா

சினிமாவில் 19 ஆண்டுகள் நீடிப்பது மகிழ்ச்சி - நடிகை ஸ்ரேயா
சினிமாவில் 19 ஆண்டுகளாக நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகை ஸ்ரேயா அளித்துள்ள பேட்டி வருமாறு.
15 ஆண்டுகளுக்கு முன்பு நா அல்லுடு தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்தேன். இப்போது ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘ஆர் ஆர் ஆர்‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

இந்த படத்தில் இயக்குனர் ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் நான் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் அஜய்தேவ்கான் ஜோடியாக வருகிறேன். அதே மாதிரி பெண் இயக்குனரின் ‘லிட்டில் பேர்ட்‘ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். பெண் இயக்குனர் படத்தில் இதுவரை பணியாற்றியது இல்லை என்ற குறையை இந்த படம் தீர்த்து வைக்கும். அதுமட்டுமன்றி தமிழில் 2 புதிய படங்களில் நடிக்கவும் இந்தியில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டு இருக்கிறேன். இப்போது கணவருடன் ஸ்பெயினில் தங்கி இருக்கிறேன். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இந்தியாவுக்கு திரும்பி இந்த படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்பேன்.” இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.