ஊரடங்கில் விவசாயம் செய்கிறேன் - நடிகை சமந்தா
நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டின் மாடியில் தோட்டம் வைத்து செடிகள் வளர்த்து வருகிறார். அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு.
“சினிமாவில் வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்திய நான் இப்போது விவசாயம் செய்கிறேன். ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் முடங்கி இருக்கிறோம். இந்த நேரத்தில் எனது வீட்டையே விவசாய பண்னையாக மாற்றி இயற்கை உரங்கள் வைத்து விவசாயத்தை ஆரம்பித்து இருக்கிறேன்.
வீட்டின் மொட்டை மாடியில்தான் இந்த விவசாயம் நடக்கிறது. அங்கு காய்கறி தோட்டம் வைத்து இருக்கிறேன். அதில் விதவிதமான காய்கறிகளை பயிரிடுகிறேன். கீரை வகைகளும் பயிர் செய்கிறேன். மண்ணை தோண்டி விதையை நடுவதால் உங்கள் இதயத்துக்கு சந்தோஷம் கிடைக்கும். நான் திறமையான நடிகை என்று எல்லோரும் பாராட்டுகின்றனர்.
ரசிகர்களும் விமர்சகர்களும் எனது நடிப்புக்கு முழு மதிப்பெண் அளிக்கிறார்கள். முழுமதிப்பெண் வாங்குவது எனக்கு இப்போது வந்த பழக்கம் இல்லை. பள்ளிகாலத்திலேயே அது இருக்கிறது. ஆண்களுக்கு சமமாக எடைதூக்குகிறேன் என்கின்றனர். சிறுவயதில் பெண்கள் ஆண்களை விட பலகீனமானவர்கள் என்று கேட்டு வளர்ந்தேன். அது பொய் ஆண்களுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்காக எடைகள் தூக்குகிறேன்” இவ்வாறு சமந்தா கூறினார்.

Related Tags :
Next Story