நடிகை சுபா புஞ்சா திருமணம்
நடிகை சுபா புஞ்சா புஞ்சாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது.
தமிழில் 2004-ல் வெளியான மச்சி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா புஞ்சா. தொடர்ந்து திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்ட பழம் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்தார். பெங்களூருவை சேர்ந்த சுபா புஞ்சாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது.
சுமந்த் பில்லவா என்பவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து உள்ளார். காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார்.
மேலும் சுபா புஞ்சா கூறும்போது, ‘’நான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் சுமந்த் பில்லவாவின் புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஊரடங்கு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வோம். டிசம்பர் மாதம் எங்கள் திருமணம் நடக்கும்‘’ என்றார். சுபா புஞ்சாவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story