நகைச்சுவை நடிகர்‘கும்கி’ அஸ்வின் காதல் திருமணம்- பட்டதாரி பெண்ணை மணக்கிறார்


நகைச்சுவை நடிகர்‘கும்கி’ அஸ்வின் காதல் திருமணம்- பட்டதாரி பெண்ணை மணக்கிறார்
x
தினத்தந்தி 20 Jun 2020 5:23 AM IST (Updated: 20 Jun 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின்.

கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின். இவர், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் ஆவார். ‘பாஸ் என்ற பாஸ்கரன்,’ ‘ஈட்டி,’ ‘ஜாக்பாட்,’ ‘கணிதன்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கும், சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. வித்யாஸ்ரீ, அமெரிக்காவில் படித்து, ‘எம்.எஸ்.’ பட்டம் பெற்றவர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து ‘கும்கி’ அஸ்வின்-வித்யாஸ்ரீ இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் வருகிற 24-ந் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடக்கிறது.


Next Story