‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் புடவையில் நடித்தது புதிய அனுபவம் -அக்‌ஷய்குமார்


‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில்  புடவையில் நடித்தது புதிய அனுபவம் -அக்‌ஷய்குமார்
x
தினத்தந்தி 4 July 2020 7:05 AM GMT (Updated: 4 July 2020 7:05 AM GMT)

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் புடவையில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று நடிகர் அக்‌ஷய்குமார் கூறினார்.

லாரன்ஸ் நடித்து இயக்கி திரைக்கு வந்த காஞ்சனா படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். நாயகியாக கியாரா அத்வானி வருகிறார். இந்தி பதிப்பையும் லாரன்சே இயக்கி உள்ளார். இந்த படம் இணைய தளத்தில் வெளியாக உள்ளது. படத்தில் அக்‌ஷய்குமார் சில காட்சிகளில் புடவை அணிந்து நடித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “புடவை உடுத்தி நடித்தது வித்தியாசமான புதிய அனுபவமாக இருந்தது. புடவை சிறந்த உடை. புடவை அணிந்து பஸ்சில் ஓடிச்சென்று ஏறும் பெண்களையும் ரெயிலில் செல்லும் பெண்களையும் வேலைக்கு செல்லும் பெண்களையும் பார்க்கிறோம். ஆனால் என்னால் புடவையை உடுத்திக்கொண்டு நடக்ககூட முடியவில்லை. புடவை உடுத்தும் பெண்களை வாழ்த்துகிறேன்“ என்றார்

Next Story