ஆரவாரம் இல்லாமல் சில சாதனைகள்...
நடிகர் சார்லி, ஆரவாரம் இல்லாமல் சில சாதனைகள் புரிந்த நகைச்சுவை நடிகர்.
‘முனைவர்’ பட்டம் பெற்ற ஒரே தமிழ் நகைச்சுவை நடிகர் சார்லிதான். ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் குணச்சித்ர வேடங்களில் நடிப்பதை தனது வெற்றி ரகசியமாக வைத்து இருக்கிறார். கடந்த வருடம் வெளிவந்த ‘கிருமி’ படத்தில் காவல்துறைக்கு துப்பு கொடுப்பவராக வந்தார். ‘பாம்பு சட்டை’யில் சாக்கடை தொழிலாளி, ‘மாநகரம்’ படத்தில், கிராமத்தில் இருந்து சென்னைக்கு முதல்முறையாக வந்த டாக்சி டிரைவர், ‘மெய்’ படத்தில் மனைவி, மகளை இழந்து தே டும் பரிதாபத்துக்குரிய குடும்ப தலைவராக நடிப்பில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். இந்த வருடம், ‘வெள்ளைப்பூக்கள்’ படத்தில் நகைச்சுவையும், குணச்சித்ரமும் கலந்த நடிப்பை தந்தார். ‘பிழை’ படத்தில் கல்குவாரி தொழிலாளியாக நடிப்பில் உலுக்கி எடுத்தார். ‘பொய்க்கால் குதி ரை’ படத்தில் டைரக்டர் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட அவர் இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
Related Tags :
Next Story