சினிமா செய்திகள்

“சமூகத்துக்கு கொரோனா கொடுத்த படிப்பினைகள்” நடிகை சுபிக்‌ஷா + "||" + "Lessons Corona Gave to the Community" Actress Subhiksha

“சமூகத்துக்கு கொரோனா கொடுத்த படிப்பினைகள்” நடிகை சுபிக்‌ஷா

“சமூகத்துக்கு கொரோனா கொடுத்த படிப்பினைகள்” நடிகை சுபிக்‌ஷா
தமிழில் கடுகு, கோலிசோடா-2 ஆகிய படங்களில் நடித்தவர் சுபிக்‌ஷா. தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் யார் இவர்கள், உதயநிதியுடன் கண்ணை நம்பாதே , ஆர்.கே சுரேஷின் வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கி உள்ள நடிகை சுபிக்‌ஷா கூறியதாவது:-

“உலகத்தையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் சமூகத்துக்கு பல படிப்பினைகளை வழங்கியுள்ளது.

நம்மையும், நாம் வாழும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. என் வேலைகளை நானே செய்து கொள்ளும் துணிவை கொடுத்துள்ளது. எந்த நிலையிலும் உறுதி குலையாமல், வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் போக்கை கொடுத்துள்ளது.

பலரை, இந்த ஊரடங்கு நாட்கள் சமையலை நோக்கித் திருப்பியுள்ளது. ஆண்களையும் வீடு சுத்தம் செய்வது சமையல் செய்வது என்று அனைத்து வேலைகளையும் செய்ய வைத்துள்ளது. நம்மை சுற்றியிருப்பவர்கள் மீதான அக்கறையை வளர்த்துள்ளது.

இவையாவும், கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ள படிப்பினை. கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் கவலை அளிக்கின்றது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.”

இவ்வாறு சுபிக்‌ஷா கூறினார்.