சினிமா செய்திகள்

துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை + "||" + Akshara Gowda regrets acting in Thalapathy Vijay’s Thuppakki; Says she was promised THIS role originally

துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை

துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.
மும்பை

உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா.துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் அக்‌ஷரா, கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் சிறிய வேடத்தில் அக்‌ஷரா கவுடா நடித்து உள்ளார்.

சமீபத்தில் அக்‌ஷரா அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், “துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதவிதமாக நடந்தது. அப்போது நான் மும்பையில் இருந்தேன். துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரு நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. மற்றபடி அந்தப் படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். காஜல் அகர்வால் தோழியாக நடிக்க என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருப்பினும் அதற்காக எனக்கு கோபமில்லை." என்று கூறியுள்ளார்.

விஜய், அஜித் இருவரிடையே இருக்கும் ஒற்றுமை என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அக்‌ஷரா, “இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகம் பேசமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஷர்ட் இல்லாமல் நடிகர் விஜய் மிகவும் அழகாக இருப்பார் என்றும் அக்‌ஷரா கவுடா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அஜித்துடன் ஆரம்பத்தில் நடித்த போது எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. படம் வெளியான போது தான் அஜித் மிகப்பெரிய நடிகர் என்பது தெரிய வந்தது. எனக்கு நிறைய டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார். சினிமா தாண்டி அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது ‘லவ் லைஃப்’.முதலில் நாம் அவரைப் பார்க்கும் போது நம் குடும்பத்தாரின் நலம் விசாரிப்பார்.

விஜய் சேதுபதியுடன் உணவருந்த விரும்புவதாக அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்
நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ பட காட்சிகள் கசிந்த விவகாரத்தில் டிஜிட்டல் நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
2. விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கிறது...?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
3. விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா டீசர் வெளியீடு
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
4. லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா போலீசார் எச்சரிக்கை
பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
5. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி விதி மீறல் - தமிழக அரசுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல்என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.