சமூகப்பணிகளில், ஒரு வில்லன் நடிகர்!
வில்லன் நடிகர் ரவிமரியா, தமிழக அரசு தயாரித்த கொரோனா பற்றிய விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார்.
வில்லன் நடிகர் ரவிமரியா, தமிழக அரசு தயாரித்த கொரோனா பற்றிய விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
“நான் நடிகர் மற்றும் டைரக்டர் என்றுதான் பலருக்கு தெரியும். ஆனால் அடிப்படையில் நான் சமூகப்பணி படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவன். சினிமாவுக்குள் வந்ததால், என் படிப்பை பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது. அதை ஈடுகட்டும் விதமாக ‘கொரோனா பற்றிய விளம்பர படத்தில் நடித்தேன்.
விமல், ஆதி, நட்டி, யோகிபாபு, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோரை கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசவைத்து, அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறேன். மருத்துவ விதிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து சமூகப்பணிகளில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறேன்.”
இவ்வாறு ரவி மரியா கூறினார்.

Related Tags :
Next Story