மலையாள நடிகர் அனில் முரளி காலமானார்


மலையாள நடிகர் அனில் முரளி காலமானார்
x
தினத்தந்தி 30 July 2020 11:21 AM GMT (Updated: 2020-07-30T16:51:48+05:30)

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி காலமானார்.


திருவனந்தபுரம்,

தமிழில் நிமிர்ந்து நில், கொடி, தனி ஒருவன் உள்ளிட்ட பலப் படங்களில் நடித்த மலையாள நடிகர் அனில் முரளி (வயது 56) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1993-ம் ஆண்டு வெளியான ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அனில் முரளி. தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல், வால்டர் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் ஒரு சில தெலுங்கு மொழிப் படங்கள் என 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சுமா என்ற மனைவியும், ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் உள்ளனர்.

மலையாள நடிகர் அனில் முரளி மறைவிற்கு நடிகர்,நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story