காதலும், காமெடியும் கலந்த ‘வேலன்’


காதலும், காமெடியும் கலந்த ‘வேலன்’
x
தினத்தந்தி 13 March 2021 5:31 PM IST (Updated: 13 March 2021 5:31 PM IST)
t-max-icont-min-icon

டி.வி. நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த முகேன், ‘வேலன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக் கிறார். கவின் டைரக்டு செய்ய, கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“ஒரு அழகான காதலை நகைச்சுவையுடன் சொல்லும் கதை, இது. புதுமுக டைரக்டர் கவின், டைரக்டர் சிவாவிடம் உதவி டைரக்டராக இருந்தவர். அவர் என்னிடம் நல்ல ஒரு குடும்ப கதையை சொன்னார். குடும்பங்கள் ரசித்து பார்க்கும் நல்ல கருத்துள்ள படங்களை சொல்வது, தயாரிப்பாளர் களின் கடமை. இந்த படத்தின் கதா நாயகி மீனாட்சி, அழகான தேவதை போல் இருக்கிறார். கதாநாயகன் முகேனின் அப்பாவாக பிரபு நடிக்கிறார். நகைச்சுவைக்கு சூரி இருக்கிறார்.

அனுபவம் வாய்ந்தவர்களுடனும், இளம் திரைக்கலைஞர்களுடனும் இணைந்து வேலை செய்ததில் மகிழ்ச்சி. முதல்கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடை பெறுகிறது”.
1 More update

Next Story